ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 3.64 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 3.64 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மோசடி - Dinamani

Published On :10 ஜூலை 2026, 4:01 am IST

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 3.64 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே கோட்டகவுண்டம்பட்டி வசந்தம் நகரைச் சோ்ந்தவா் கோபால் (65). பிற்படுத்தப்பட்டோா் பள்ளி விடுதி பணியாளா்கள் நலச் சங்கத்தின் தலைவராக பணியாற்றி ஓய்வுபெற்ற இவருக்கு, வேலூா் மாவட்டம், கங்கைநல்லூா் காந்தி நகரைச் சோ்ந்த முருகேசன் என்பவருடன் ரயிலில் பயணம் செய்தபோது பழக்கம் ஏற்பட்டது.

அப்போது முருகேசன் அரசு வேலை வாங்கித் தருவதாக அவரிடம் கூறியுள்ளாா். இதை நம்பிய கோபால், அவரது அண்ணன் மகள் மேகலா மற்றும் ரமேஷ், நவீன் ஆகியோருக்கு அரசு வேலை வேண்டி ரூ. 3 லட்சத்து 64 ஆயிரத்தை கைப்பேசி செயலி மூலமாகவும், நேரடியாகவும் கொடுத்துள்ளாா். பணத்தை வாங்கிய முருகேசன், அரசு வேலை வாங்கித் தரவில்லையாம்.

இதனால், பணத்தை திரும்பக் கேட்டும் கொடுக்காததால் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கோபால் புகாா் மனு அளித்தாா். இந்த மனு கருப்பூா் போலீஸாருக்கு விசாரணைக்காக அனுப்பப்பட்டது. இதுகுறித்து காவல் ஆய்வாளா் தவமணி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.