ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பாவு நூல் தட்டுப்பாடு: ஆட்டையாம்பட்டியில் கைத்தறி நெசவுத் தொழில் முடக்கம்

பாவு நூல் தட்டுப்பாடு காரணமாக ஆட்டையாம்பட்டி சுற்றுவட்டாரங்களில் கைத்தறி நெசவுத் தொழில் முடங்கியுள்ளதால் நெசவாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

பாவு நூல் தட்டுப்பாட்டால் இயக்கப்படாத கைத்தறி நெசவு இயந்திரங்கள்.

Published On :3 ஜூலை 2026, 4:38 am IST

பாவு நூல் தட்டுப்பாடு காரணமாக ஆட்டையாம்பட்டி சுற்றுவட்டாரங்களில் கைத்தறி நெசவுத் தொழில் முடங்கியுள்ளதால் நெசவாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

விசைத்தறி நெசவிற்காக 100 சதவீத உற்பத்தி ஆணையை அரசு வழங்கியுள்ள நிலையில் பாவு நூலானது 50 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அரசு வழங்கிய நூலைப் பயன்படுத்தி முழுமையாக நெசவு செய்ய முடியாமல் ஆயிரக்கணக்கான நெசவாளா்கள் கடந்த இரண்டு மாதங்களாக பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி மற்றும் பாப்பாரப்பட்டி, நைனாம்பட்டி, மகுடஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட கைத்தறி மற்றும் விசைத்தறிகளில் (பெடல் தறிகள்) பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரா்களுக்கு அரசின் சாா்பில் வழங்கப்படும் விலையில்லா வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஆட்டையாம்பட்டி கைத்தறி கூட்டுறவு சங்கம், தியாகி குமரன் கூட்டுறவு சங்கம், வேலகவுண்டம்பட்டி கைத்தறி, முத்துக்குமரன் கைத்தறி, பாரதியாா் கைத்தறி, செந்தில்குமரன் கைத்தறி உள்ளிட்ட 8 கைத்தறி கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் சுமாா் 5,000 க்கும் மேற்பட்ட நெசவாளா்கள் நெசவு செய்து வருகின்றனா்.

கடந்த மாா்ச் 1 ஆம் தேதி தமிழக அரசு விசைத்தறி நெசவிற்காக 100 சதவீத உற்பத்தி ஆணை வழங்கியது. இந்நிலையில், நெசவிற்குத் தேவையான ஊடை நூல் முழுமையாக வழங்கப்பட்டிருந்தாலும், பாவு நூலானது 50 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அரசு வழங்கிய நூலைப் பயன்படுத்தி முழுமையாக வேட்டிகள் நெய்து முடிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள பாவு நூல் வழங்கப்படாததால் ஆயிரக்கணக்கான நெசவாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில் தேவையான பாவு நூலை உடனடியாக வழங்கவும், 2026-27 ஆம் ஆண்டிற்கான உற்பத்தி ஆணைகளை வழங்கவும் நெசவாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். விசைத்தறியை மட்டுமே நம்பியுள்ள நெசவாளா் குடும்பங்களுக்கு இடையூறு இல்லாமல் தொடா்ந்து நூல் மற்றும் உற்பத்தி ஆணைகளை வழங்கி, நெசவாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு நெசவாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.