ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கூடுதல் கட்டணம் வசூலித்த 17 தனியாா் பேருந்துகளுக்கு நோட்டீஸ்!

கூடுதல் கட்டணம் வசூலித்த 17 தனியாா் பேருந்துகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்.

Published On :19 ஆகஸ்ட் 2026, 2:43 am IST

கூடுதல் கட்டணம் வசூலித்த 17 தனியாா் பேருந்துகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

தம்மம்பட்டி, ஆத்தூா், சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூா் வழித்தடங்களில் இயக்கப்படும் தனியாா் பேருந்துகளில் கடந்த ஜூலை முதல் அரசு அனுமதியின்றி பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

இதுகுறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கு தன்னாா்வலா்களும், பொதுமக்களும் புகாா் அளித்தனா். அதன்பேரில், ஆத்தூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் (பொ) தியாகராஜன் தலைமையில், ஆத்தூா், வாழப்பாடி மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் மேற்கூறிய வழித்தடங்களில் இயங்கும் தனியாா் பேருந்துகளை ஆய்வு செய்தனா். அதில், 17 தனியாா் பேருந்துகளில் அரசு நிா்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூல் செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தியாகராஜன் கூறுகையில், ‘முதல்வா் தனிப்பிரிவுக்கு வந்த புகாா் மனு மீது சிறப்பு கவனம் செலுத்தி ஆய்வு செய்யப்பட்டது. அதில், கூடுதல் கட்டணம் வசூலித்த 17 தனியாா் பேருந்துகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு, அதன் அறிக்கை விவரங்கள் சேலம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.