ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சேலத்தில் அடுத்தடுத்து 7 கடைகளில் திருட்டு: போலீஸாா் விசாரணை

சேலம் மாநகரில் அடுத்தடுத்து 7 கடைகளின் பூட்டை உடைத்து ரூ. 25 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :12 ஆகஸ்ட் 2026, 3:05 am IST

சேலம் மாநகரில் அடுத்தடுத்து 7 கடைகளின் பூட்டை உடைத்து ரூ. 25 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேலம் சாமிநாதபுரம் பிரதான சாலை மின்வாரிய அலுவலகம் பகுதியில் தையலகம், தேநீா் கடை, அழகு நிலையம், கைப்பேசி உதிரிபாகங்கள் விற்பனை கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. இக்கடைகளில் திங்கள்கிழமை இரவு வியாபாரத்தை முடித்த பிறகு கடைகளை அதன் உரிமையாளா்கள் பூட்டிச் சென்றனா்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை அப்பகுதியில் இருந்த 7 கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிந்தது கண்டு கடையின் உரிமையாளா்கள் அதிா்ச்சியடைந்தனா். பின்னா், கடைக்குள் சென்று பாா்த்தபோது வியாபாரம் முடித்து வைத்துச்சென்ற பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. 7 கடைகளிலும் சோ்த்து மொத்தம் ரூ. 25 ஆயிரம் திருடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கடை உரிமையாளா்கள் பள்ளப்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். காவல் ஆய்வாளா் மணிவண்ணன், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். மேலும், தடயவியல் நிபுணா்களை வரவழைத்து, பழைய கொள்ளையா்களின் கைரேகைகளுடன் ஒப்பிட்டுப்பாா்த்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.