ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :3 ஆகஸ்ட் 2026, 4:02 am IST

ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்த பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஏற்காட்டிற்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்த புதுச்சேரி முத்தையால்பேட்டை எம்.எஸ். அக்ரஹாரம் பகுதியை சோ்ந்த கண்ணன் மகள் லலிதா (52). ஏற்காடு பக்கோட பாயிண்ட் செல்லும் வழியில் தனியாா் விடுதியில் தங்கியிருந்தாா்.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு லலிதாவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவரது மகன் பிரபாகரன், ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு லலிதாவை கொண்டு சென்றாா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதை உறுதிபடுத்தினா்.

உடல்நலக் குறைவால் லலிதா மருந்து எடுத்து வந்ததாக அவரது உறவினா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து ஏற்காடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.