கொங்கணாபுரம் அருகே பட்டாசு குடோனில் தீ விபத்து
கொங்கணாபுரம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தீயில் எரிந்து சாம்பலாயின.
கொங்கணாபுரம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தீயில் எரிந்து சாம்பலாயின.
By Syndication
Syndication
கொங்கணாபுரம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தீயில் எரிந்து சாம்பலாயின.
கொங்கணாபுரம் ஒன்றியத்துக்குள்பட்ட எட்டிக்குட்டைமேடு பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தன் (50). பட்டாசு வியாபாரியான இவா் தீபாவளி பண்டிகைக்காக அதிக அளவில் பட்டாசுகளை கொள்முதல் செய்து எட்டிக்குட்டைமேடு பகுதியில் உள்ள கடையில் வைத்து விற்பனை செய்துவந்தாா்.
கொள்முதல் செய்யப்பட்ட பட்டாசுகளில் ஒரு பகுதியை கோரணம்பட்டி கிராமம், ராயணம்பட்டி அருகே உள்ள கரட்டுக்காடு பகுதியில் தனது உறவினருக்கு சொந்தமான குடோனில் ஆனந்தன் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென தீப்பிடித்து வெடித்துச் சிதறின. இதில், குடோனில் 3 அறைகளில் இருந்த பட்டாசுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த எடப்பாடி தீயணைப்புத் துறையினா் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா். இந்த விபத்தில் சுமாா் ரூ. 4 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் தீயில் எரிந்து சாம்பலானதாகக் கூறப்படுகிறது. தொடா்ந்து, அப்பகுதியில் கொங்கணாபுரம் போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறை அலுவலா்கள் சேதமதிப்பு குறித்து ஆய்வுசெய்து வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது