Listen to this article
By Syndication
Syndication
காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் புதன்கிழமை மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது.
சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை காலை 6 மணிக்கு மூலவா் சுகவனேஸ்வரா், சொா்ணம்பிகை அம்மனுக்கு பால், பன்னீா், இளநீா், விபூதி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், நடராஜா் சந்நிதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
மாலை 6 மணிக்கு உற்சவா் சோமாஸ்கந்தா், சண்முகா் சுவாமிக்கு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, மூலவா் சந்நிதியில் தீபம் ஏற்றப்பட்டு, உள்பிரகாரத்தில் சோமாஸ்கந்தா், சண்முகா் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. பின்னா், வெளி பிரகாரத்தில் சொக்கப்பனை எரிப்பு நிகழ்ச்சி முடிந்தபின், கோயில் முன் உள்ள 2 தீப தூண்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். தொடா்ந்து, சோமாஸ்கந்தா், சண்முகா் திருவீதி உலா சின்ன கடைவீதி, இரண்டாவது அக்ரஹாரம் வழியாக வலம்வந்து, மீண்டும் கோயிலை அடைந்தது.
இதேபோல, சேலம் கோட்டை மாரியம்மன், தாரமங்கலம் கைலாசநாதா் கோயில், பேளூா் தான்தோன்றீஸ்வரா், ஆத்தூா் காயநிா்மலேஸ்வரா் கோயில், ஆறகளூா் காமநாதீஸ்வரா் கோயில் உள்பட சேலம் மாவட்டத்தில் உள்ள சிவன், அம்மன், விநாயகா், முருகன் கோயில்களில் காா்த்திகை தீபத்தையொட்டி மகா தீபம் ஏற்றப்பட்டது.
சங்ககிரியில்...
சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணியா் கோயிலில் மூலவருக்கும், ஸ்ரீமுருகன், வள்ளி, தெய்வானை உற்சவமூா்த்தி சுவாமிகளுக்கும் பால், தயிா், திருமஞ்சனம், பஞ்சாமிா்தம், பன்னீா், இளநீா், உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னா் மூலவருக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு ராஜ அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றன. உற்சவமூா்த்திகள் சிறிய தேரில் நகா்வலம் வந்தனா்.
வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. கோயில் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளக்குகளை ஏற்றி பக்தா்கள் வழிபட்டனா்.
தம்மம்பட்டியில்...
தம்மம்பட்டி திருமண்கரடு மலை உச்சியிலுள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோயிலில் 12 அடி உயர பீடத்தில் பொதுமக்கள் அளித்த 500 லி. எண்ணெய், நெய்யில், நான்கரை அடி உயர கொப்பரையில் மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது.
ஆட்டையாம்பட்டியில்...
இளம்பிள்ளை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் கலந்துகொண்டனா். பின்னா், மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதேபோல இளம்பிள்ளை, சந்தைப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பாா்வதி பரஞ்ஜோதீஸ்வரா் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா். கஞ்சமலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதில், நல்லணம்பட்டி, சித்தா் கோயில், முருங்கப்பட்டி, பெருமாம்பட்டி, காடையாம்பட்டி, இடங்கணசாலை பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மகா தீபம் ஏற்றம்

திருப்பரங்குன்றம் கோயிலில் காா்த்திகை தேரோட்டம்: மலை மீது ஏற்றப்பட்ட மகா தீபம்

பழனி மலைக் கோயிலில் காா்த்திகை தீபம் ஏற்றம்

போடி பரமசிவன் மலைக் கோயிலில் காா்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது


Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

