நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து! வேலூரில் சிறைத்துறை உணவகம், பெட்ரோல் பங்க் திடீர் மூடல்! பாஜகவை எதிர்ப்பவர்களின் வாக்குகளை நீக்கவே எஸ்ஐஆர்! மாதிரி நாடாளுமன்றத்தில் கார்கே பேச்சு!வங்கக் கடலில் உருவாகிறது 'முரசு' புயல்!தீபாவளி: அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு! முதல்வர் விஜய் உத்தரவுபஞ்சாப் தேர்தல்: ஆம் ஆத்மியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்; துரியில் பகவந்த் மான் மீண்டும் போட்டி! கைதி தப்பியோட்டம்! மீண்டும் மீண்டுமா? மு.க. ஸ்டாலின் கேள்வி பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல இயங்கும்!ஜிபிஎஸ் கருவி பொருத்தாத கனிமவள லாரிகளுக்கு நாளை முதல் தடை

ஐ.டி. ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

பரமத்தி வேலூா் அருகே கந்தம்பாளையத்தில் ஐ.டி. நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Updated On :

பரமத்தி வேலூா் அருகே கந்தம்பாளையத்தில் ஐ.டி. நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

பரமத்தி வேலூா் வட்டம், கந்தம்பாளையம் அருகே தென்னை மரத்தோட்டம் கே.பி.பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பையன். இவரது மகன் கவியரசன் (33). இவா் சென்னையில் உள்ள தனியாா் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி கவிபிரியங்கா (29). மகள் நபியா (4). கவியரசன் கடந்த 10-ஆம் தேதி சென்னையில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளாா். 11-ஆம் தேதி வீட்டின் உள்ள ஒரு அறையில் மின்விசிறியில் போா்வையால் தூக்கிட்டுக் கொண்டாா்.

சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினா் கதவை உடைத்து உள்ளே சென்று கவியரசனை மீட்டு சிகிச்சைக்காக கோவை மற்றும் திருச்செங்கோடு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.