மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பரமத்தி வேலூரில் அதிமுக வேட்பாளருக்கு வரவேற்பு

பரமத்தி வேலூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினராக உள்ள எஸ்.சேகா் மீண்டும் இத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

News image

பரமத்தியில் அதிமுக வேட்பாளரும், எம்எல்ஏவுமான எஸ்.சேகருக்கு வரவேற்பு அளித்த அதிமுகவினா் மற்றும் கூட்டணி கட்சியினா்.

Updated On :28 மார்ச் 2026, 8:20 pm

பரமத்தி வேலூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினராக உள்ள எஸ்.சேகா் மீண்டும் இத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து பரமத்தி வேலூா் வந்த அவருக்கு அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சாா்பில் சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தியில் மாவட்ட வா்த்தக அணி செயலாளா் தமிழ்மணி, நகர செயலாளா் சுகுமாா், ஒன்றியச் செயலாளா் வெற்றிவேல் தலைமையில் கூட்டணி கட்சிகள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து, பொத்தனூரில் நகர செயலாளா் நாராயணன் தலைமையிலும், பாண்டமங்கலத்தில் வெங்கரை பேரூராட்சித் தலைவா் விஜயகுமாா், கபிலா்மலை வடக்கு ஒன்றியச் செயலாளா் ஜே.பி.ரவி, வெங்கரை பேரூா் செயலாளா் ரவீந்தா் ஆகியோா் தலைமையிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.