மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஏப். 1-இல் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்

நாமக்கல்லில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் ஏப். 1-இல் தொடங்குகிறது.

News image

நீச்சல் பயிற்சி. - கோப்புப்படம்

Updated On :26 மார்ச் 2026, 9:53 pm

நாமக்கல்லில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் ஏப். 1-இல் தொடங்குகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நாமக்கல் மாவட்ட கிளை சாா்பில், கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் ஏப். 1 முதல் ஜூன் 14 வரை நடைபெற உள்ளது. அனைவரும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இம்முகாமில், 12 நாள்களுக்கான கட்டணம் ரூ. 1,200 மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் ரூ. 1,416 ஆகும். இத்தொகையை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.

நீச்சல் கற்றுக்கொடுக்கும் திட்டத்தின்கீழ் நடைபெறும் இப்பயிற்சி முகாம் 5 கட்டங்களாக 12 நாள்கள் நடைபெற உள்ளது. நீச்சல் பயிற்சி காலை 6 - 7, 7 - 8, 8 - 9 மணிவரையிலும், மாலை 4 - 5, 5 - 6 மணிவரையிலும் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு, 74017 03492 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம். மேலும், பயிற்சி முடித்தோருக்கு சான்றிதழ் வழங்கப்படும்.