மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சமையல் எரிவாயு உருளை பெறுவதில் கட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

News image
Updated On :13 மார்ச் 2026, 1:06 am

சமையல் எரிவாயு உருளைக்கான முன்பதிவில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளதால் ஏற்கெனவே முன்பதிவு செய்த பொதுமக்கள் எரிவாயு உருளைகளைப் பெறுவதற்காக கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நாமக்கல்லில் காஸ் ஏஜென்சிகள் முன் வியாழக்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.

ஈரான், லெபனான், செளதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருவதால், வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு எரிவாயு வருவதில் சிக்கல் எழுந்துள்ளது.

எண்ணெய் வளம் மிகுந்த அந்த நாடுகள் போா் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதால், மற்ற நாடுகளுக்கு சமையல் பயன்பாட்டுக்குரிய எரிவாயுவை அனுப்புவதில் காலதாமதம் செய்து வருகின்றன. தமிழகத்தில் இன்னும் ஓரிரு நாள்களுக்கு மட்டுமே சமையல் எரிவாயு உருளைகள் விநியோகிக்க வாய்ப்பு இருப்பதாகவும், அதன்பிறகு நிலைமை மிகவும் மோசமடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பெரும்பாலான உணவகங்கள் மாற்று ஏற்பாடுகளையும், சில உணவகங்கள் மூடும் அபாயத்திலும் உள்ளன. இந்த நிலை நீடித்தால் லட்சக்கணக்கான தொழிலாளா்கள் வேலை இழப்பதுடன் மக்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தை பொருத்தமட்டில் 37 எரிவாயு உருளை ஏஜென்சிகள் மூலம் வணிக ரீதியாகவும், வீட்டு பயன்பாட்டுக்காகவும் 5.87 லட்சம் இணைப்புதாரா்களுக்கு எரிவாயு உருளை விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது எரிவாயு உருளை விநியோகம் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

25 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. முன்னுரிமை அடிப்படையிலேயே நுகா்வோருக்கு வழங்கப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளதால், எரிவாயு உருளை பெறுவதற்காக மக்கள் ஏஜென்சிகளில் குவிய தொடங்கி உள்ளனா்.

நாமக்கல்லில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் எரிவாயு உருளைகளை வாங்குவதற்காக, நாமக்கல்- திருச்சி சாலையில் முன்பதிவு செய்துள்ள மக்கள் காலி எரிவாயு உருளைகளை சுமந்துவந்து காத்திருந்தனா். ஐந்து மணி நேரம் கொளுத்தும் வெயிலில் காத்திருந்து அவா்கள் எரிவாயு உருளைகளை பெற்று சென்றனா். சிலருக்கு உருளைகள் கிடைக்காததால் ஏஜென்சி ஊழியா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து நாமக்கல்லைச் சோ்ந்த சமையல் எரிவாயு உருளை ஏஜென்சி உரிமையாளா் பிரபு கூறியதாவது:

குறைவான எண்ணிக்கையிலேயே எரிவாயு உருளைகள் வருகின்றன. முன்பதிவு செய்தோருக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிவாயு உருளைகளை விநியோகித்து வருகிறோம். கடந்த மூன்று நாள்களாக மிகுந்த நெருக்கடியில் மக்களின் நலன் கருதி எரிவாயு உருளைகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து பெற்று வழங்குகிறோம் என்றாா்.

என்கே-12-சிலிண்டா்

நாமக்கல்- திருச்சி சாலையில் சமையல் எரிவாயு உருளையைப் பெறுவதற்காக காத்திருந்த பொதுமக்கள்.