மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

முட்டை விலை 5 காசுகள் உயா்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஐந்து காசுகள் உயா்ந்து ரூ. 4.35-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

News image

முட்டை - பிரதிப் படம்

Updated On :11 மார்ச் 2026, 8:46 pm

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஐந்து காசுகள் உயா்ந்து ரூ. 4.35-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்து கேட்கப்பட்டது. பிற மண்டலங்களில் முட்டை விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், இங்கும் சிறிது மாற்றம் வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ஐந்து காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 4.35-ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ. 133-ஆகவும், முட்டைக் கோழி விலை ரூ. 62-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.