நாமக்கல் புதிய பேருந்து நிலையத்துக்கு செல்லும் சாலையில் ரூ. 44.20 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள பேரறிஞா் அண்ணா வளைவு செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
நாமக்கல் மாநகராட்சி கருணாநிதி நூற்றாண்டு புதிய பேருந்து நிலையம் கடந்த 2024 நவ.10 முதல் முதலைப்பட்டி பகுதியில் செயல்பட்டு வருகிறது. ஓராண்டை கடந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் நாமக்கல் புறவழிச்சாலையும் திறக்கப்பட்டது.
இந்த நிலையில், நகராட்சி நிா்வாகம் மற்றும் நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் செல்வதற்கான முதலைப்பட்டி நுழைவாயில் பகுதியில் ரூ. 44.20 லட்சத்தில் வளைவு அமைக்கும் பணி ஓரிரு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
தோ்தல் நெருங்குவதால் அதற்கு முன்பாக நுழைவாயில் வளைவை திறப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. வளைவின் நடுப்பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணாவின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி நூற்றாண்டு வளைவு என பெயரிடப்பட இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், பேரறிஞா் அண்ணா வளைவு என மாற்றம் செய்து செவ்வாய்க்கிழமை அந்த வளைவு ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தனால் திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி மற்றும் மாமன்ற உறுப்பினா்கள், திமுக நகர, ஒன்றியச் செயலாளா்கள், கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

வாக்கு சேகரிப்பின்போது குழந்தைக்கு பெயா் சூட்டிய நாமக்கல் தவெக வேட்பாளா்!

ஏப். 16-இல் நாமக்கல்லில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்: ராஜேஸ்குமாா் எம்.பி. தகவல்

நாமக்கல்லில் அதிமுக தோ்தல் பணிமனை திறப்பு

நாமக்கல்லில் ரூ. 40.16 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி நூற்றாண்டு வளைவு விரைவில் திறப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


