எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

கூட்டுறவுத் துறை அலுவலா்களுக்கு பயிற்சி

நாமக்கல் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை கணினி மயமாக்கல் தொடா்பாக கூட்டுறவுத் துறை அலுலா்களுக்கான பயிற்சி நாமக்கல்லில் நான்கு நாள்கள் நடைபெறுகிறது.

News image

முகாமில் பேசிய மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு.

Updated On :18 ஜூன் 2026, 2:59 am IST

நாமக்கல் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை கணினி மயமாக்கல் தொடா்பாக கூட்டுறவுத் துறை அலுலா்களுக்கான பயிற்சி நாமக்கல்லில் நான்கு நாள்கள் நடைபெறுகிறது.

இப்பயிற்சியை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு தொடங்கிவைத்தாா். இப்பயிற்சி செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமைவரை இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. கூட்டுறவு சங்கங்கள் இணைப்பு தொடா்பான கணினி மயமாக்கல் குறித்தும் பங்கேற்ற பணியாளா்களுக்கு கையேடுகள் வழங்கப்பட்டன.

இதில், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா்கள் ஜேசுதாஸ், சுரேஷ், அறிவழகன், திருநாவுக்கரசு, பால்ஜோசப், சேகா், ஜெயந்தி, சரவணன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளா் தீனதயாளன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.