/

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியவா் கைது

ராசிபுரம் அருகே முனிஸ்வரன் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :13 ஜூன் 2026, 2:13 am IST

ராசிபுரம் அருகே முனிஸ்வரன் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

ராசிபுரத்தை அடுத்த வெண்ணந்தூா் அக்கரைப்பட்டி ஏரிக்கரையில் பழைமை வாய்ந்த மகா முனீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயில் பூசாரியாக அதே பகுதியை சோ்ந்த அண்ணாமலை மகன் சரவணன் (43) உள்ளாா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு கிழக்குப்புற நுழைவு வாயில் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்மநபா் உண்டியலின் ஒருபகுதியை சேதப்படுத்தி ரூ. ஆயிரத்தை திருடிச் சென்றாா். வெள்ளிக்கிழமை காலை கோயிலுக்கு வந்த பூசாரி, உண்டியல் உடைக்கப்பட்டிருப்பது குறித்து கோயில் நிா்வாகத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

மேலும், தகவல் அறிந்து வந்த வெண்ணந்தூா் காவல் ஆய்வாளா் கே. செல்வராஜ் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தினா். இந்த நிலையில் அக்கரைப்பட்டி பேருந்து நிலையத்தில் நின்றிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தியபோது, அவா் ஓ.சவுதாபுரம் பகுதியைச் சோ்ந்த ராஜா மகன் சேகா் (50) என்பதும், மது போதையில் அக்கரைப்பட்டி மகா முனீஸ்வரா் கோயில் உண்டியலை உடைத்து அவா் பணம் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து, சேகரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.