ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தெருநாய்கள் கடித்து குதறியதில் இரண்டு ஆடுகள் உயிரிழப்பு

பரமத்தி வேலூா் அருகே தெருநாய்கள் கடித்துக் குதறியதில் இரண்டு உயர்ரக ஆடுகள் உயிரிழந்தன.

கோப்புப் படம்

Published On :26 ஜூலை 2026, 3:09 am IST

பரமத்தி வேலூா் அருகே தெருநாய்கள் கடித்துக் குதறியதில் இரண்டு உயர்ரக ஆடுகள் உயிரிழந்தன.

பரமத்தி வேலூரை அடுத்த படமுடிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பூபதி. இவா் தனது வீட்டில் சுமாா் 10 ஆடுகளை வளா்த்து வருகிறாா். இந்த நிலையில் சனிக்கிழமை காலை இரண்டு ஆடுகள் தெருநாய்களால் கடித்து உயிரிழந்து கிடந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இந்த ஆடுகளின் மதிப்பு சுமாா் ரூ. 20 ஆயிரம் இருக்கும் என தெரிவித்துள்ளாா். தெருநாய்கள் தொல்லை தொடா்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனா். கடந்த சில தினங்களுக்கு முன்பு பிலிக்கல்பாளையம் அருகே தெருநாய்கள் கடித்ததில் நான்கு ஆடுகள் உயிரிழந்தது.

இதனால் தெருநாய்களை பிடிக்க்க உள்ளாட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.