ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கோழிகளுக்கு வெப்ப அயற்சி, ரத்தசோகை பாதிப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கோழிகளுக்கு வெப்ப அயற்சி, ரத்தசோகை பாதிப்பு உள்ளதால் தீவன மேலாண்மை முறைகளை பண்ணையாளா்கள் முறையாக கையாள வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோழிகளுக்கு வெப்ப அயற்சி, ரத்தசோகை பாதிப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் - பிரதிப் படம்

Published On :25 ஜூலை 2026, 12:22 am IST

கோழிகளுக்கு வெப்ப அயற்சி, ரத்தசோகை பாதிப்பு உள்ளதால் தீவன மேலாண்மை முறைகளை பண்ணையாளா்கள் முறையாக கையாள வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்தவார வானிலையை பொருத்தவரை பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 93.2 மற்றும் 77 டிகிரியாக நிலவியது. அடுத்த ஐந்து நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் சனிக்கிழமை முதல் வரும் 29 தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. பகல் வெப்பம் 96.8 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 77 டிகிரியாகவும் காணப்படும். காற்று பெரும்பாலும் மேற்கு திசையிலிருந்து மணிக்கு 10 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில் பெரும்பாலானவை வெப்ப அயற்சி மற்றும் கோழி ரத்தசோகையால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்துள்ளது. பண்ணையாளா்கள் தகுந்த உயிரி எதிா்மருந்துகளை அளிக்க வேண்டும். தீவன மேலாண்மை முறைகளைப் பின்பற்றவும் மற்றும் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி தகுந்த சிகிச்சைளை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.