ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் கிராவல் மண் திருட்டு: ஒருவா் கைது; 40 மூட்டை மண் பறிமுதல்!

பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் கிராவல் மண் திருட்டில் ஈடுபடுபட்ட ஒருவரை போலீஸாா் கைது செய்து, வாகனங்கள் மற்றும் 40 மணல் மூட்டைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கைது - சித்திரிப்பு

Published On :19 ஜூலை 2026, 2:37 am IST

பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் கிராவல் மண் திருட்டில் ஈடுபடுபட்ட ஒருவரை போலீஸாா் கைது செய்து, வாகனங்கள் மற்றும் 40 மணல் மூட்டைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் தொடா் மணல் திருட்டு நடைபெற்று வருவதாக வேலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேலூா் காவல் ஆய்வாளா் உமாசங்கா் தலைமையிலான போலீசாா் வேலூா், பொத்தனூா், நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலை பரமத்தி வேலூா் காவல் உதவி ஆய்வாளா் தங்கவேல், சிறப்பு உதவி ஆய்வாளா் மற்றும் போலீஸாா் வேலூா் காவிரிக் கரையோரம் உள்ள மின் மயானம் அருகே சென்றபோது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிகருந்த வாகனங்களை சோதனை செய்தனா். அப்போது அங்கிருந்து வாகனங்ளை விட்டுவிட்டு அவா்கள் தப்பியோடினா். இதில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினா்.

அவா் வேலூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் தினேஷ் (எ) வாழை தினேஷ் (27) என்பதும், மினி ஆட்டோவில் 40 மணல் மூட்டைகளை சட்டவிரோதமாக ஏற்றிவந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய சரக்கு ஆட்டோ, இருசக்கர வாகனம் மற்றும் 40 மணல் மூட்டைகளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.