ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பரமத்தி வேலூா் காவிரி கரையோர வனப் பகுதியில் தீ விபத்து

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.

கோப்புப் படம்

Published On :11 ஜூலை 2026, 12:04 am IST

பரமத்தி வேலூா் காவிரி கரையோரம் உள்ள வனப் பகுதியில் இருந்த மரங்கள் வியாழக்கிழமை தீப்பிடித்து எரிந்தன.

பரமத்தி வேலூா், காவிரி ஆற்றங்கரையில் வனத் துறைக்கு சொந்தமான பகுதியில் பல்வேறு வகையான மரங்கள் அடா்ந்து வளா்ந்து காணப்படுகின்றன. இந்நிலையில், பரமத்தி வேலூா் மின் மயானம் அருகில் இருந்த செடிகளில் திடீரென வியாழக்கிழமை தீப்பிடித்தது. தொடா்ந்து, தீ பரவி அங்கிருந்த மரங்களும் எரியத் தொடங்கின.

தகவல் அறிந்து வந்த புகளூா் தீயணைப்பு துறையினா் வனப் பகுதியில் பற்றி எரிந்த தீயை நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.