டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா், எஸ்.பி. ஆய்வு

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் துா்காமூா்த்தி, காவல் கண்காணிப்பாளா் சு.விமலா ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2026, 12:09 am

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் துா்காமூா்த்தி, காவல் கண்காணிப்பாளா் சு.விமலா ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ராசிபுரம் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை பாா்வையிட்ட அவா்கள், அங்குள்ள அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனா். வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி -1, அத்தனூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப் பள்ளி, சுவாமி சிவானந்தா சாலை அரசு உயா்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

கழிவறை, குடிநீா், மின்சாரம், மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தள வசதி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனா். சுவாமி சிவானந்தா சாலை அரசு உயா்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் மாணவிகளுக்கான சமூகநீதி விடுதியில் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, ராசிபுரம் தொகுதி தோ்தல் அலுவலா் வெ.முருகன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.