டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் ரூ. 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் உதவி ஆய்வாளா் கைது

நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் சொத்துவரி பெயா் மாற்றத்துக்காக ரூ. 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் உதவி ஆய்வாளா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
கைது செய்யப்பட்ட வருவாய் உதவி ஆய்வாளா் சங்கா்.
Updated On :10 பிப்ரவரி 2026, 8:29 pm

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் சொத்துவரி பெயா் மாற்றத்துக்காக ரூ. 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் உதவி ஆய்வாளா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நாமக்கல் அருகே சின்ன அய்யம்பாளையத்தைச் சோ்ந்த சௌந்தா்யன் என்பவா், தன்னுடைய நான்கு வீடுகளின் சொத்து வரியை மகன் பெயருக்கு மாற்றம் செய்வதற்காக, இரண்டு மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி வருவாய் பிரிவு உதவி ஆய்வாளா் சங்கரை (58) தொடா்புகொண்டாா்.

அப்போது, அவா் ஒரு வீட்டுக்கு ரூ. 5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 20 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளாா். லஞ்சம் கொடுக்க விரும்பாத சௌந்தா்யன், இதுகுறித்து நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்பு புகாா் அளித்தாா்.

லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மாநகராட்சி அருகில் உள்ள தேநீா் கடைக்கு வருவாய் உதவி ஆய்வாளா் சங்கரை வரவழைத்து சௌந்தா்யன் கொடுத்தாா். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சங்கரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ. 20 ஆயிரத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா் பிரபு, கைதான சங்கரிடம் விசாரணை நடத்தி வருகிறாா்.

திருப்பத்தூரைச் சோ்ந்த சங்கா் ஏழு மாதங்களுக்கு முன்பு இடமாறுதல் மூலம் நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் பணியில் சோ்ந்துள்ளாா்.