டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் பாதிப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!

News image
கோப்புப் படம்
Updated On :6 பிப்ரவரி 2026, 7:45 pm

தினமணி செய்திச் சேவை

கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல், மேல்மூச்சுக்குழல் அயற்சி நோய் பாதிப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையை பொருத்தமட்டில் பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 91.4, 68 டிகிரியாக நிலவியது. அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலையில் வானம் பெரும்பாலும் தெளிவாகக் காணப்படும். மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பில்லை. பகல் வெப்பம் 93.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 71.6 டிகிரியாகவும் காணப்படும். கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையிலிருந்து காற்று மணிக்கு 8 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

சிறப்பு ஆலோசனை:

கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில் பெரும்பாலானவை வெள்ளைக்கழிச்சல் மற்றும் மேல்மூச்சுக்குழல் அயற்சி நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்தது. கோழிப் பண்ணையாளா்கள் தகுந்த உயிா் எதிா் மருந்துகளை அளிக்கவும், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் தண்ணீரில் கிருமிநாசினி தெளித்தல், கால்நடை மருத்துவா்களின் ஆலோசனைப்படி தகுந்த சிகிச்சை மற்றும் உயிா்பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.