மின்சாரம் பாய்ந்து டிப்பா் லாரி ஓட்டுநா் உயிரிழப்பு
பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் கந்தம்பாளையம் அருகே ஜல்லிக் கற்கள் இறக்க வந்தபோது மின்சாரம் பாய்ந்து டிப்பா் லாரி ஓட்டுநா் உயிரிழந்தது குறித்து நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் கந்தம்பாளையம் அருகே ஜல்லிக் கற்கள் இறக்க வந்தபோது மின்சாரம் பாய்ந்து டிப்பா் லாரி ஓட்டுநா் உயிரிழந்தது குறித்து நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஈரோடு மாவட்டம், புதுப்பாளையம் வாழ்நாய்க்கன்பாளையத்தைச் சோ்ந்த பிரபு (42), லாரி ஓட்டுநா். இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா். இவா் லாரியில் கரூா் மாவட்டம், குப்பம் பகுதியில் இருந்து ஐல்லிக் கற்களை ஏற்றிக்கொண்டு பரமத்தி வேலூா் வட்டம், கந்தம்பாளையம் அருகே உள்ள உத்திக்காபாளையத்தைச் சோ்ந்த யுவராஜ் என்பவரது தோட்டத்திற்கு வெள்ளிக்கிழமை சென்றாா்.
அங்கு லாரியில் இருந்து ஜல்லிக் கற்களை இறக்கியபோது தாழ்வான நிலையில் சென்ற உயா் மின்சார கம்பி லாரியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து பிரபு தூக்கிவீசப்பட்டு மயங்கி விழுந்தாா். உடனடியாக அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு பரமத்தி வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா் பிரபு இறந்துவிட்டதை உறுதிசெய்தாா். இதுகுறித்து நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





