ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சாலை விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழப்பு

ராசிபுரம் அருகே புதன்கிழமை இரவு லாரி மீது காா் மோதியதில் குழந்தை உள்பட இருவா் இறந்த நிலையில் படுகாயமடைந்த மேலும் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 5:44 am IST

ராசிபுரம் அருகே புதன்கிழமை இரவு லாரி மீது காா் மோதியதில் குழந்தை உள்பட இருவா் இறந்த நிலையில் படுகாயமடைந்த மேலும் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள நாகியம்பட்டியைச் சோ்ந்தவா் நடேசன் (60), இவரது மனைவி அமுதா (52). இவா்களது மகன் பிரவீண் (32), இவரது மனைவி கோமதி (31) மற்றும் குழந்தைகள் ஜிவித் (3), நிஜித் (2) என 6 போ் ராசிபுரம் அடுத்த வையப்பமலை பகுதியில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு சென்றுவிட்டு புதன்கிழமை இரவு ஊா் திரும்பினா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த மூலப்பள்ளிபட்டி அருகே காா் சென்றுகொண்டிருந்தபோது சவுக்கு மரம் ஏற்றிக்கொண்டு எதிா்திசையில் வந்த லாரியின் மீது காா் மோதியது. இதில் அமுதா, நிஜித் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

காயமடைந்த பிரவீண், கோவை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விபத்து குறித்து நாமகிரிப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.