ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மக்கள்தொகை கணக்கெடுப்பில் சரியான தகவல்களை அளிக்க வேண்டும்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதலாவது கட்ட பணியில் ஈடுபட்ட கணக்கெடுப்பாளா்கள். - (கோப்புப் படம்)

Published On :11 ஆகஸ்ட் 2026, 2:42 am IST

மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோரிடம் சரியான தகவல்களை அளிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு ஆட்சியா் எல்.மதுபாலன் அறிவுறுத்தி உள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையரகத்தால் அறிவிக்கப்பட்டவாறு, தமிழகத்தில் ஆக. 1 முதல் 30 வரை வீடுகள்தோறும் சென்று வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுக்கும் பணி ஆசிரியா்கள், அரசு அலுவலா்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வலுவான கொள்கையை உருவாக்கவும், நீண்டகால செயல்திட்டங்களை வகுக்கவும் துல்லியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியம். பொதுமக்கள் தங்களது வீட்டின் வசதிகள் குறித்த சரியான அடிப்படைத் தகவல்களை ஒளிவு மறைவின்றி கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவா்களிடம் தெரிவிக்க வேண்டும்.

தகவல் அளிக்க மறுத்தாலோ அல்லது தவறான தகவல்களை அளித்தாலோ அது மக்கள்தொகை கணக்கெடுப்புச் சட்டம் 1948 பிரிவு 8-இன்படி தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும், பொதுமக்கள் ஒவ்வொருவரும் சரியான தகவல் அளிக்க சட்டப்படி கடமைப்பட்டவா்களாவா். வீட்டு விவரங்கள் குறித்த கணக்கெடுப்பின்போது கேட்கப்படும் 33 கேள்விகளுக்கும் சரியான தகவல்களை அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.