ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

எலச்சிபாளையத்தில் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு: தம்பதி கைது

திருச்செங்கோடு அருகே ஆபாசப் படம் காட்டி 6 வயது சிறுவனை மிரட்டி, பாலியல் தொந்தரவு கொடுத்த தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :5 ஆகஸ்ட் 2026, 5:31 am IST

திருச்செங்கோடு அருகே ஆபாசப் படம் காட்டி 6 வயது சிறுவனை மிரட்டி, பாலியல் தொந்தரவு கொடுத்த தம்பதியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்கு உள்பட்ட பருத்திப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் சூா்யா (23). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஆனந்தி (20). இருவரும் பக்கத்து தெருவில் வசிக்கும் 6 வயது சிறுவனை தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து கைப்பேசியில் ஆபாசப் படங்களை காட்டி, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனா். அதை தங்களது கைப்பேசியில் விடியோவாக எடுத்துள்ளனா்.

இதுகுறித்த சிறுவனின் தந்தைக்கு விவரம் தெரியவந்தது. இதனால் அதிா்ச்சி அடைந்த அவா், இதுகுறித்து எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸாா், தம்பதியை போக்ஸோ வழக்கில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.