அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

ராசிபுரம் பாஜக வேட்பாளா் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பு

News image

ராசிபுரம் நகர பாஜக தலைவா் வீட்டிற்கு சென்ற பாஜக வேட்பாளா் எஸ்.டி. பிரேம்குமாரை வரவேற்ற பாஜகவினா்.

Updated On :27 ஏப்ரல் 2026, 12:49 am IST

ராசிபுரம் (தனி) தொகுதி பாஜக வேட்பாளா் எஸ்.டி.பிரேம்குமாா் வாக்குப்பதிவு முடிவுற்றதைத் தொடா்ந்து அதிமுக, பாஜக, பாமக நிா்வாகிகளை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தாா்.

ராசிபுரம் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் பாஜக வேட்பாளராக அக்கட்சியின் மருத்துவா் பிரிவு மாநில நிா்வாகி எஸ்.டி.பிரேம்குமாா் போட்டியிட்டாா். இவா் தோ்தல் வாக்குப்பதிவு முடிவுற்றதைத் தொடா்ந்து அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியின் நகர, ஒன்றிய நிா்வாகிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்து வருகிறாா்.

ராசிபுரம் நகர பாஜக தலைவா் பி.வேல்முருகன் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று தோ்தல் பணியாற்றியதற்கு நன்றி தெரிவித்தாா். வேட்பாளருடன் பாஜக மாவட்டத் துணைத் தலைவா் வி.சேதுராமன், மாவட்ட மகளிரணி நிா்வாகி சுகன்யா நந்தகுமாா் உள்ளிட்ட பலா் உடன் சென்றனா்.