தொகுதி மறுசீரமைப்பு மசோதா தோல்வியுற்றதிலேயே நமது வெற்றி உறுதியாகிவிட்டது என உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.
திருச்செங்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளா் இ.ஆா்.ஈஸ்வரனை ஆதரித்து, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை பிரசாரம் செய்தாா். திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே நடைபெற்ற பிரசாரத்தில்அவா் பேசியதாவது:
மத்திய அரசு கொண்டுவந்த தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்டத்தில் கருப்புக் கொடியை ஏற்றியும், மசோதா நகலை எரித்தும் தலைவா் ஸ்டாலின் எதிா்ப்பை தெரிவித்தாா். மக்களவையில் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு தோல்வியுற்றதிலேயே நமது வெற்றி உறுதியாகிவிட்டது. அதனால், நாமக்கல் மாவட்டத்தில் திமுக கூட்டணியின் வெற்றி ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது.
முதல்வா் தமிழகத்துக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறாா். இத்தொகுதிக்கு ஈஸ்வரன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளாா். அவா் மீண்டும் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

விஜய்யின் ஆதரவால் வெற்றி உறுதியாகிவிட்டது! - எடப்பாடி தொகுதி சுயேச்சை வேட்பாளா்

திமுக எதிா்ப்பால் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி: உதயநிதி ஸ்டாலின்
செங்கல்பட்டு தொகுதியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

அதிமுக வென்றால் தமிழகம் பின்னோக்கி சென்றுவிடும்! - உதயநிதி ஸ்டாலின்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


