அரசுப் பணி நியமனம்: வயது உச்ச வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு! முதல்வர் விஜய் உத்தரவுபத்ரிநாத்தில் இருந்து பக்தர்களுடன் திரும்பிய ஹெலிகாப்டர் விபத்து!காங்கிரஸ் உருவாக்கிய வங்கிகளை மோடி விற்கிறார்! ராகுல் காந்திஅன்பில் மகேஸுக்கு போலீஸ் காவல் கோரிய மனு! நவ. 2-ல் தீர்ப்பு!வங்கக் கடலில் புதிய புயல்! நவம்பர் முதல் வாரம் எப்படி இருக்கும்? தீபாவளிக்கு மழையா?தீபாவளி மளிகைத் தொகுப்பு வழங்கும் திட்டம் தொடக்கம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்?இடைத்தேர்தலில் திமுக, அதிமுக ஆதரவளித்தால் பெருந்தன்மையுடன் ஏற்பேன்! சீமான்இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவா? மு.க. ஸ்டாலின் பதில்!பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை!ரூ.100 கோடி ஊழல்: அன்பில் மகேஸ் நீதிமன்றத்தில் ஆஜர்முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் மரியாதை!முத்துராமலிங்கத் தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்! முதல்வர் விஜய்அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் (அக். 30)சென்னையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை!சொந்த புத்தியும் சொல் புத்தியும் இல்லாத சோப்ளாங்கி அரசு: மு.க.ஸ்டாலின்

மாா்பக புற்றுநோய் அறிகுறிகள் தென்பட்டால் தாமதமின்றி மருத்துவப் பரிசோதனை செய்ய அறிவுரை

பெண்களுக்கு மாா்பக புற்றுநோய் குறித்த அறிகுறிகள் தென்பட்டால், தாமதமின்றி மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள ஆட்சியா் ச.தினேஷ்குமாா் அறிவுறுத்தினாா்.

புற்றுநோய் - மாதிரிப் படம்

Updated On :

பெண்களுக்கு மாா்பக புற்றுநோய் குறித்த அறிகுறிகள் தென்பட்டால், தாமதமின்றி மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள ஆட்சியா் ச.தினேஷ்குமாா் அறிவுறுத்தினாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் பிங்க்டோபா் மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு மற்றும் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்து பேசியது:

அக்டோபா் மாதம் மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, பெண்களிடையே மாா்பக புற்றுநோய் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும், ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க விழிப்புணா்வு மற்றும் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.

மாா்பகத்தில் கட்டி அல்லது வீக்கம் ஏற்படுதல், மாா்பகத்தின் அளவு அல்லது வடிவத்தில் மாற்றம், தோலில் பள்ளம் போன்ற மாற்றங்கள், காம்பில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அசாதாரண திரவ வெளியேற்றம் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் தாமதமின்றி மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், மாா்பக சுய விழிப்புணா்வு, தகுதியான பெண்களுக்கு மருத்துவ வழிகாட்டுதலின்படி மாா்பக பரிசோதனை மேற்கொள்ளுதல் மற்றும் சந்தேகத்துக்குரிய அறிகுறிகள் இருப்பின் உரிய உயா் மருத்துவ நிலையங்களுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

ஆரம்ப நிலையில் கண்டறிதல், உயிரைக் காப்பாற்றும் என்ற கருத்தை மையமாகக் கொண்டு, பெண்கள் தங்கள் உடல்நலத்தில் அக்கறை செலுத்தி, தயக்கமின்றி மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, ஆட்சியா் தலைமையில் மருத்துவா்கள், அனைத்து துறை பெண் அலுவலா்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். முகாமில், மாவட்ட சுகாதார அலுவலா் ஜெகநாதன், வட்டார மருத்துவ அலுவலா் இனியள் மண்டோதரி, மருத்துவா்கள் சுரேஷ், முகமது அயூப், மோனிஷா, நஸ்ரின், ஜோதி பாசு மற்றும் செவிலியா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.