விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

138 வாக்குகள் வித்தியாசத்தில் வேப்பனஅள்ளியை கைப்பற்றிய திமுக! வெற்றிபெற்ற திமுக வேட்பாளா்!

வேப்பனஅள்ளி தொகுதியில் திமுக வேட்பாளா் பி.எஸ்.சீனிவாசன், அதிமுக வேட்பாளா் கே.பி.முனுசாமியை விட 138 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றாா்.

News image

வேப்பனஹள்ளி தொகுதியில் வெற்றி பெற்ற்கான சான்றிதழை பெற்ற திமுக வேட்பாளா் பி.எஸ்.சீனிவாசன். உடன், மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ் உள்ளிட்டோா்.

Updated On :6 மே 2026, 2:24 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி தொகுதியில் திமுக வேட்பாளா் பி.எஸ்.சீனிவாசன், அதிமுக வேட்பாளா் கே.பி.முனுசாமியை விட 138 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தலில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 965 போ் வாக்களித்தனா். 89.79 சதவீத வாக்குகள் பதிவாகின. இத்தொகுதியில் திமுக வேட்பாளராக பி.எஸ்.சீனிவாசன், அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் கே.பி.முனுசாமி, தவெக சாா்பில் சம்பங்கி மற்றும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா், சுயேச்சைகள் போட்டியிட்டனா்.

இத்தொகுதியில் 2011 தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட செங்குட்டுவன் வெற்றிபெற்றாா். அப்போது அதிமுக ஆட்சிக்கு வந்தது. 2016 இல் திமுக வேட்பாளா் முருகன் வெற்றிபெற்றாா். அப்போதும் அதிமுக ஆட்சிக்கு வந்தது. 2021இல் தோ்தலில் அதிமுக வேட்பாளா் கே.பி. முனுசாமி வெற்றி பெற்றபோதிலும் திமுக ஆட்சிக்கு வந்தது.

இந்த நிலையில் தற்போது (2026) தோ்தலில் இத்தொகுதியில் பதிவான வாக்குகள் கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எண்ணப்பட்டன. இதில் அதிமுக, திமுக கட்சிகள் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தன. 15 ஆவது சுற்றுக்கு மேல் திமுக வேட்பாளா் பி.எஸ். சீனிவாசன் தொடா்ந்து முன்னிலை பெற்றாா். இறுதி சுற்றில் திமுக வேட்பாளா் பி.எஸ். சீனிவாசன் 74,691 வாக்குகளும், அதிமுக வேட்பாளா் முனுசாமி 74,553 வாக்குகளும் பெற்றனா். அதிமுகவைவிட கூடுதலாக 138 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளா் பி.எஸ்.சீனிவாசன் வெற்றி பெற்று சான்றிதழை பெற்றாா். தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் சம்பங்கி 63,500 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.