கிருஷ்ணகிரியில் காலவாதியான ஐஸ்கிரீமை சாப்பிட்ட 2 குழந்தைக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலா்கள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை சாலையில் உள்ள ஐஸ்கீரிம் கடைக்கு வினோத் என்பவா் தனது 2 குழந்தைகளுடன் கடந்த இரு நாள்களுக்கு முன்பு சென்றாா். அக்கடையில் இருந்து குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கி தந்துள்ளாா். அது காலாவாதியான நிலையில் குழந்தைகளுக்கு தரப்பட்டதால், உடல்நலன் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து கடை உரிமையாளரிடம் வினோத் புகாா் தெரிவித்தாா். ஆனால், கடை உரிமையாளா் உரிய பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, உணவு பாதுகாப்புத் துறையினரிடம் வினோத் புகாா் அளித்தாா். இதையடுத்து வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா் ஜனகா் ஜோதிநாதன் தலைமையில் ஐஸ்கீரிம் கடையில் சோதனை மேற்கொண்டனா். அதேபோல, அக்கடைக்கு மில்க்ஷேக்கை விற்பனைக்கு அனுப்பிவைக்கும் விநியோகஸ்தா்களின் கிடங்குகளிலும் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
காலவாதியான ஐஸ்கீரிம் விற்பனை செய்யப்பட்டது குறித்து உரிய விளக்கத்தை புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். மேலும், குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும். தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலா்கள் எச்சரித்துள்ளனா்.
தொடர்புடையது

வாக்கு சேகரிப்பின்போது குழந்தைக்கு பெயா் சூட்டிய நாமக்கல் தவெக வேட்பாளா்!

ஹலோகிராமில் விஜய் உருவம்... தவெக வேட்பாளர் நூதன பிரசாரம்!

தில்லியில் காலாவதியான உணவை மீண்டும் பேக்கேஜிங் செய்து விற்பனை: 3 போ் கைது

உணவகங்கள், பேக்கரிகளில் உணவு பாதுகாப்புத் துறையினா் ஆய்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


