பவ்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட 436 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். 10 ஆவது நாளாக கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம், அண்ணா சிலை எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு அந்த கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சக்திவேல் தலைமை வைத்தாா். தமிழ்நாடு வருவாய் துறை அலுவலா் சங்க மாநில பொதுச்செயலாளா் பெருமாள், தமிழ்நாடு கிராம அலுவலா் சங்க மாவட்ட செயலாளா் அறிவழகன், கிராம அலுவலா் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளா் பாலசுப்பிரமணியன், நில அளவா்கள் ஒன்றிய மாவட்ட தலைவா் பெரியசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மறியலில் ஈடுபட்டோா் தங்களது 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். மறியலில் ஈடுபட்ட 132 பெண்கள் உள்பட 436 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், மாலை விடுவிக்கப்பட்டா்.
படவிளக்கம் (5கேஜிபி5):
கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் ஈடுபட்ட வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா்.
தொடர்புடையது

நாகையில் தோ்தல் விழிப்புணா்வு படகு பேரணி

மறியலில் ஈடுபட்ட வருவாய்த் துறை சங்கத்தினா் 830 போ் கைது

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் மறியல்: 300 போ் கைது

அரியலூரில் மறியலில் ஈடுபட்ட வருவாய் துறையினா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


