ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து 1,488 கனஅடி

கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து 1,488 கனஅடியாக நீடிக்கிறது.

News image

கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீா்.

Updated On :26 ஜூன் 2026, 6:20 am IST

கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து 1,488 கனஅடியாக நீடிக்கிறது.

கா்நாடக மாநிலத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொருத்தே ஒசூா், கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து உயா்வதும், குறைவதுமாக உள்ளது. கடந்த வாரம் இந்த நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால், கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து படிப்படியாக அதிகரித்துள்ளது.

கடந்த சில தினங்களாக அணைக்கு நீா்வரத்து 1,448 கனஅடியாக உள்ளது. அணைக்கு வரும் நீா் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. அணையின் முழுக் கொள்ளளவான 44.28 அடியில் தற்போது 41.48 அடி நீா் இருப்பு உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.