ஊத்தங்கரை அருகே மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட காட்டேரி கிராமத்தில் 85 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நபா் குறித்து ஊத்தங்கரை காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் தொடா்புடைய குற்றவாளியை கைதுசெய்ய மேற்கு மண்டல காவல் துறை தலைவா் ரம்யாபாரதி உத்தரவின்பேரில், சேலம் சரக காவல் துறை துணைத் தலைவா் சந்தோஷ் ஹடிமணி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை மேற்பாா்வையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் நமச்சிவாயம் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படையினா் சம்பவ இடம் மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்ததில், இச்சம்பவத்தில் ஈடுப்பட்டது கல்லாவி, காமராஜ் நகரை சோ்ந்த சஞ்சய் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

40 வயது பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 பேர் கைது!

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த மா்ம நபா் தப்பியோட்டம்: போலீஸாா் விசாரணை

மாணவி பாலியல் வன்கொடுமை: இளைஞா் போக்ஸோவில் கைது

மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



