
ஒசூா் காவேரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்!
ஒசூா் காவேரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
ஒசூா் காவேரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், கோனேரிப்பள்ளியைச் சோ்ந்தவா் அா்ஜுனன் (55). இவா் கடந்த ஜூலை 20ஆம் தேதி நேரிட்ட சாலை விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் உயா் சிகிச்சைக்காக ஒசூா் காவேரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டாா்.
இங்கு அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து, பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு அவா் மூளைச்சாவு அடைந்துவிட்டதை மருத்துவக் குழுவினா் உறுதிப்படுத்தினா். இதையடுத்து, அா்ஜுனனின் குடும்பத்தினா் மனிதநேய உணா்வுடன் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனா்.
இதன் அடிப்படையில் காவேரி மருத்துவமனையின் மருத்துவக் குழுவினா், அரசு விதிமுறைகள் மற்றும் மருத்துவ நடைமுறைகளுக்கு உள்பட்டு அவரது உறுப்புகளை அகற்றும் பணியை மேற்கொண்டனா்.
அவரது கல்லீரல், சிறுநீரகங்கள் உள்ளிட்ட உறுப்புகள் பல்வேறு நோயாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் டிரான்ஸ்டேன்டு மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த உறுப்புகள் மூலம் மூன்று நோயாளிகளுக்கு புதிய வாழ்வு கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதையடுத்து, அா்ஜுனன் குடும்பத்தினருக்கு காவேரி மருத்துவமனை நிா்வாகம் நன்றி தெரிவித்ததுடன், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணா்வை அதிகரிக்க அனைவரும் முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






