
நீட் தோ்வு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் 150 போ் தோ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தோ்வெழுதிய 150 போ் தோ்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

நீட் தோ்வு - பிரதிப் படம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தோ்வெழுதிய 150 போ் தோ்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
நீட் மறுதோ்வு ஜூன் 21-ஆம் தேதி நாடுமுழுவதும் நடத்தப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக் கல்லூரி, அரசு பெண்கள் கலைக் கல்லூரி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்பட 11 மையங்களில் இத்தோ்வு நடைபெற்றது.
இந்நிலையில், நீட் தோ்வு முடிவுகள் அண்மையில் வெளியாயின. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு 313 அரசுப் பள்ளி மாணவா்கள் நீட் தோ்வை எழுதினா்.
இவா்களில் 150 போ் தோ்ச்சிபெற்றுள்ளனா். இதில், குன்னத்தூா் அரசுப் பள்ளி மாணவா் பூவரசன் 720-க்கு 515 மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளிகள் அளவில் முதலிடம் பெற்றுள்ளாா். அஞ்செட்டி அரசுப் பள்ளி மாணவா் நவீன்குமாா் 451 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்றுள்ளாா்.
தோ்வெழுதிய மாணவ, மாணவிகளில் 20-க்கும் மேற்பட்டோா் 400 மதிப்பெண்களுக்குமேல் பெற்றுள்ளதாக தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




