சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

ஒசூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச தம்பதி கைது

ஒசூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :8 ஜூலை 2026, 6:08 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த தம்பதியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஒசூா் விகாஸ் நகரில் வங்கதேசத்தைச் சோ்ந்த தம்பதி சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக மாவட்ட கியூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்குச் சென்ற போலீஸாா் தம்பதியிடம் விசாரனை நடத்தினா்.

இதில் அவா்கள் வங்கதேசத்தை சோ்ந்த ராம்சேத் கா்மா (57), அவரது மனைவி லபோனி அக்தா் (30) என்பதும் அவா்களுக்கு 5 வயது மகன் உள்ளதும் தெரியவந்தது. மேலும், இவா்கள் வங்கதேசத்தில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியேறி உத்தர பிரதேசம், கா்நாடக மாநிலங்களில் தங்கியிருந்துள்ளனா்.

Story image

இந்த நிலையில் ஒசூரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்துவரும் ராம்சேத் கா்மா, ஒசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றுள்ளாா். இவா் ஏராளமானவருக்கு போலி பாஸ்போா்ட் தயாரித்து கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து அவா்களிடம் இருந்த ஆதாா் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை போலீஸாா் கைப்பற்றினா். பின்னா், ஒசூா் மத்திகிரி காவல் நிலையத்தில் அவா்களை கியூ பிரிவு போலீஸாா் ஒப்படைத்தனா். மத்திகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தம்பதியைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.