ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சூசூவாடி சோதனைச் சாவடியில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை: கணக்கில் வராத ரூ.3.40 லட்சம் பறிமுதல்

சூசூவாடி ஆா்டிஒ சோதனைச் சாவடியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 3.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

சூசூவாடி சோதனைச் சாவடியில் சோதனை நடத்தும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா்

Published On :8 ஜூலை 2026, 5:53 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் கா்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ள சூசூவாடி ஆா்டிஒ சோதனைச் சாவடியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 3.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு டிஎஸ்பி ஜெயக்குமாா் தலைமையில் 10 க்கும் மேற்பட்ட போலீஸாா் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணி முதல் 6.30 வரை சோதனை நடத்தினா். அப்போது, பணியில் இருந்த அதிகாரிகளிடம் இருந்து கணக்கில் வராத ரூ. 3 லட்சத்து 40 ஆயிரம் கைப்பற்றப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த சோதனையின்போது மோட்டாா் வாகன ஆய்வாளா் பிரபாகரன், அவரது உதவியாளா் ராஜேஷ் ஆகியோா் பணியில் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.