சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

போச்சம்பள்ளியில் பொது அமைதிக்கு இடையூறாக பதாகை: போலீஸாா் வழக்குப் பதிவு

போச்சம்பள்ளியில் பொது அமைதிக்கு இடையூறாக பதாகை வைத்த விவகாரம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :2 ஜூலை 2026, 6:49 am IST

போச்சம்பள்ளியில் பொது அமைதிக்கு இடையூறாக பதாகை வைத்த விவகாரம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி நகர மையப் பகுதியில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு விழா குழுவினா் சாா்பில் பதாகை வைக்கப்பட்டிருந்தது.

அந்த பதாகைக்கு இந்து அமைப்பினா் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்தனா். இதையடுத்து, அந்த பதாகை அப்புறப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து, போச்சம்பள்ளி காவல் உதவி ஆய்வாளா் விஜய், காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் பேரில், அந்த பதாகையை வைத்த மொகரம் விழா குழுவின் ஒருங்கிணைப்பாளா் நிசாா் (45), வடிவமைப்பாளா் முகமது அனிஷ் (19), பதாகையை தயாரித்த கடை உரிமையாளா் பாக்யராஜ் (40) மற்றும் பலா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.