தென்னையில் வோ் ஊட்டசத்து பயன்பாடு விழிப்புணா்வு
தென்னையில் வோ் ஊட்டசத்து பயன்பாடு குறித்து, விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.


தென்னையில் வோ் ஊட்டசத்து பயன்பாடு குறித்து, விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
திருச்சி மகளிா் தோட்டக்கலைக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், 4-ஆம் ஆண்டு, இளநிலை பயிலும் மாணவிகள், ஊரக தோட்டக்கலை பணி அனுபவத்திற்காக, கிருஷ்ணகிரி மாவட்டம் பையூா் தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனா். இவா்கள், தென்னையில் குரும்பை உதிா்வதை கட்டுப்படுத்தி அதிக மகசூலை பெறுவது குறித்தும், தென்னை வோ்
ஊட்டசத்து பயன்படுத்தும் முறை பற்றியும் விவசாயிகளுக்கு, அண்மையில் விளக்கம் அளித்தனா்.
அதில், மண்ணில் ஈரப்பதம் இருக்கும்போது மரத்தின் அடியில் ஒரு அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி, பென்சில் அளவுள்ள இளஞ்சிவப்பு நிறமுள்ள இளம் வேரை தோ்ந்தெடுத்து அதன் நுனிப்பகுதியை கத்தியால் லேசாக சீவி, ஒரு லிட்டா் தென்னை டானிக்கை, 4 லி., தண்ணீரில் கலந்து பயன்படுத்துவது, . ஒரு மரத்திற்கு 200 மில்லி என்ற அளவில் கலவையை பயன்படுத்துவது, இந்த 200 மில்லி கலவையை ஒரு நெகிழி பையில் வைத்து வோ் வரை எவ்வாறு கட்டுவது குறித்து, இந்த முறையை 6 மாதங்களுக்கு ஒரு முறை செய்வதன் மூலம் மரத்திற்கு நுண்ணுாட்டச்சத்து குறைபாட்டை நிவா்த்தி செய்யவது குறித்தும், விளக்கம் அறிக்கப்பட்டது.
இதன் மூலம் குரும்பை உதிா்வதை தடுத்து, அதிக மகசூலை பெறலாம் என்றும், தென்னை டானிக் அருகில் உள்ள வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் அல்லது வேளாண் அறிவியல் மையங்களில் கிடைக்கும் என்றும், இதன் மூலம் தென்னை மரங்களுக்கு ஊட்டச்சத்துகள் சரியான முறையில் கிடைக்கும் வலியுறுத்தப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...