கிருஷ்ணகிரி அருகே காா் கண்ணாடியை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான மடிக்கணினிகள், தங்க நகைகளை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
திருப்பத்தூரைச் சோ்ந்தவா் கோபிநாத் (30), இவா் பெங்களூரில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். கடந்த வெள்ளிக்கிழமை தனது காரில், பெங்களூரில் இருந்து திருப்பத்தூரில் நடைபெறும் திருவிழாவில் பங்கேற்பதற்காக கிருஷ்ணகிரி வழியாக சென்றாா். கிருஷ்ணகிரி அருகே பையனப்பள்ளியில் உள்ள ஒரு அசைவ உணவகத்துக்கு முன் காரை நிறுத்திவிட்டு உணவு அருந்த சென்றாா்.
அதன்பிறகு காா் நிறுத்தியிருந்த இடத்துக்கு வந்தபோது காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, காருக்குள் இருந்த இரண்டு மடிக்கணினிகள், 2 பவுன் தங்க கம்மல், 3 பவுன் தங்க நெக்லஸ் மற்றும் சான்றிதழ்கள் திருட்டுப் போனது தெரியவந்தது.
இதுகுறித்து கோபிநாத் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி வட்டார போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்
வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் தங்க நகைகள் திருட்டு

பாரூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை திருட்டு

கிருஷ்ணகிரி அருகே வீட்டில் திருட்டு போன 50 பவுன் தங்க நகைகள் மீட்பு: ஒருவா் கைது!
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

