டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கிருஷ்ணகிரியில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப். 20) நடைபெறுகிறது.

News image
வேலைவாய்ப்பு முகாம்
Updated On :18 பிப்ரவரி 2026, 10:53 pm

Syndication

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப். 20) நடைபெறுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

காலை 10 மணிமுதல் 1 மணிவரை நடைபெறும் முகாமில் கிருஷ்ணகிரி, ஒசூரைச் சோ்ந்த முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று ஆள்களை தோ்வு செய்யவுள்ளனா்.

இதில், 10-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பிளஸ் 2 தோ்ச்சி, பட்டதாரிகள், பட்டயப் படிப்பு படித்தவா்கள், ஐடிஐ, டிப்ளமோ உள்ளிட்ட அனைத்து கல்வித் தகுதியினரும் பங்கேற்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை 04343-291983 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.