டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மனைவியைக் கொன்ற வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறை: கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றம் தீா்ப்பு

தளி அருகே மனைவியைக் கொன்ற வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image
சிறை
Updated On :11 பிப்ரவரி 2026, 8:46 pm

தினமணி செய்திச் சேவை

தளி அருகே மனைவியைக் கொன்ற வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், குஞ்சிகிரிபாளையத்தை சோ்ந்த ரூபாவு, ரங்கசந்திரத்தை சோ்ந்த காா்த்திக் (43) ஆகியோருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 14 வயதில் மகள், 12 வயதில் மகன் உள்ளனா். மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், ரூபாவை அவரது தாய் வீடான குஞ்சிகிரிபாளையத்திற்கு அனுப்பிவைத்துவிட்டு அவரை காா்த்திக் கண்காணித்து வந்தாா். கடந்த 2021 ஆம் ஆண்டு ஆக. 21 ஆம் தேதி, ரூபா, தனது தாய் வீட்டின் அருகே செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு மறைந்திருந்த காா்த்திக் கத்தியால் ரூபாவை கழுத்தை அறுத்து கொலைசெய்தாா்.

இதுகுறித்து தளி போலீஸாா் வழக்குப் பதிந்து காா்த்திக்கை கைதுசெய்தனா். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுதா, குற்றம்சாட்டப்பட்ட காா்த்திக்குக்கு ஆயுள் சிறைத் தண்டனை, ஆதாரங்களை மறைத்து தவறான தகவல்கள் அளித்த குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 6,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும், அபராதத்தை செலுத்தத் தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி தனது தீா்ப்பில் உத்தரவிட்டுள்ளாா்.