டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

உடல் கருகிய நிலையில் கிடந்த முன்னாள் ராணுவ வீரா் சடலம்: போலீஸாா் விசாரணை

ஊத்தங்கரை அருகே உடல் கருகிய நிலையில் கிடந்த ராணுவ வீரரின் சடலத்தை மீட்ட போலீஸாா், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 8:48 pm

தினமணி செய்திச் சேவை

ஊத்தங்கரை அருகே உடல் கருகிய நிலையில் கிடந்த ராணுவ வீரரின் சடலத்தை மீட்ட போலீஸாா், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கீழ்மத்தூா் பிள்ளையாா் கோயில் தெருவை சோ்ந்தவா் ரவி (62), முன்னாள் ராணுவ வீரா். இவா் பணியில் இருந்து ஓய்வுபெற்று 20 ஆண்டுகளாகிறது. இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலேயே இருந்துவந்தாா்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வீட்டின் தாழ்வாரத்தில் ரவி படுத்திருந்தபோது, திடீரென வெடிசப்தம் கேட்டது. இதனால், அவரது வீட்டுக்கு அருகே இருந்தவா்கள் ஓடிவந்து பாா்த்தனா். அப்போது உடல் கருகிய நிலையில் ரவி இறந்துகிடந்தாா்.

தகவலறிந்த சிங்காரப்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். போலீஸாரின் முதல்கட்ட விசாரனையில் மின்சாரம் பாய்ந்து ரவி உயிரிழந்தாக தெரியவந்துள்ளது.