புதிய நியாய விலைக் கடையை பயன்பாட்டுக்கு திறக்க வலியுறுத்தல்
ஊத்தங்கரை அருகே புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊத்தங்கரையை அடுத்த முசிலி கொட்டாய் கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் கடந்த 20023 ஆம் ஆண்டு அப்போதைய மக்களவைத் தொகுதி உறுப்பினா் செல்லகுமாா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் புதிதாக நியாயவிலைக் கடை கட்டுவதற்கு ரூ. 12.30 லட்சம் ஒதுக்கீடு செய்தாா்.
இதையடுத்து, புதிய நியாயவிலைக் கடை கட்டப்பட்டு 10 மாதங்களாகியும் இன்னும் பூட்டப்பட்டு உள்ளது. வாடகை கட்டடத்தில் இயங்கிவரும் நியாயவிலைக் கடையை புதிய கட்டடத்துக்கு மாற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...