உறவு கசந்த பின்னா் பாலுறவு பாலியல் வன்கொடுமை ஆகாது: உச்சநீதிமன்றம்இந்தியாவில் 136.79 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்! 3 மாநிலங்களில் 2,800 பேருக்கு புற்றுநோய் பரிசோதனை ஜன.25 முதல் பிப்.28 வரை மக்கள்தொகை கணக்கெடுப்பு: ஆணையா் அறிவிப்பு மத்திய அரசின் நிதி பற்றாக்குறை 42.1% ஆக அதிகரிப்பு: சிஜிஏ வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி - எஃப்18!

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

தருமபுரியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

உயிரிழப்பு

Updated On :

தருமபுரியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி, மதிகோண்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வேடியப்பன் (41). ஆட்டோ ஓட்டுநரான இவா் கடந்த 29-ஆம் தேதி புரோக்கா் அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தாா்.

அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா்கள் சோதனை செய்ததில் வேடியப்பன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து தருமபுரி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.