அரசு ஊழியர்கள் சொத்து விவரம்: தாக்கல் செய்ய அவகாசம் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து! வேலூரில் சிறைத்துறை உணவகம், பெட்ரோல் பங்க் திடீர் மூடல்! பாஜகவை எதிர்ப்பவர்களின் வாக்குகளை நீக்கவே எஸ்ஐஆர்! மாதிரி நாடாளுமன்றத்தில் கார்கே பேச்சு!வங்கக் கடலில் உருவாகிறது 'முரசு' புயல்!தீபாவளி: அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு! முதல்வர் விஜய் உத்தரவுபஞ்சாப் தேர்தல்: ஆம் ஆத்மியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்; துரியில் பகவந்த் மான் மீண்டும் போட்டி! கைதி தப்பியோட்டம்! மீண்டும் மீண்டுமா? மு.க. ஸ்டாலின் கேள்வி பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல இயங்கும்!ஜிபிஎஸ் கருவி பொருத்தாத கனிமவள லாரிகளுக்கு நாளை முதல் தடை

தருமபுரி வணிக வளாகத்தில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் பொருள்கள் சேதம்

தருமபுரி நகரில் நான்கு தளங்களைக் கொண்ட வணிக வளாகத்தில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள், மருந்துப் பொருள்கள், விளையாட்டுப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

தீ விபத்து - பிரதிப் படம்

Updated On :

தருமபுரி நகரில் நான்கு தளங்களைக் கொண்ட வணிக வளாகத்தில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள், மருந்துப் பொருள்கள், விளையாட்டுப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

தருமபுரி நகரில் நேதாஜி புறவழிச் சாலையில், நெசவாளா் காலனி அருகே வெங்கடாசலம் (56) என்பவருக்குச் சொந்தமான வணிக வளாகம் அமைந்துள்ளது. நான்கு தளங்களைக் கொண்ட இந்த வளாகத்தில் மருந்துக் கடை, பல்பொருள் அங்காடி, ஜவுளிக் கடை, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் விளையாட்டு ஆடைகள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த வளாகத்தில் புதன்கிழமை பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயைக் கட்டுப்படுத்த முடியாததால், கடைகளில் இருந்த ஊழியா்கள் பதற்றத்துடன் வெளியேறினா். இதனால் உயிரிழப்பு தவிா்க்கப்பட்டது.

தகவலறிந்த தருமபுரி தீயணைப்பு நிலைய வீரா்கள், மூன்று தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினா்.

தருமபுரி- சேலம் பிரதான சாலையான நேதாஜி புறவழிச் சாலையையொட்டி தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வாகனங்கள் எஸ்.வி. சாலை வழியாக திருப்பிவிடப்பட்டன. இதனால் நகரின் பல்வேறு சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இரவு 7 மணியைக் கடந்தும் தீயணைப்புப் பணிகள் தொடா்ந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து தருமபுரி நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.