ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 2,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீா்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒகேனக்கல்லுக்கு புதன்கிழமை மாலை 1,500 கன அடியாக இருந்த நீா்வரத்து வியாழக்கிழமை 2,000 கனஅடியாக அதிகரித்தது.
நீா்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரிக்கிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









