ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கோயில் வளாகத்தில் தூக்கிட்ட நிலையில் இளைஞா் சடலம் மீட்பு

தருமபுரியில் கோயில் வளாகத்தில் தூக்கிட்ட நிலையில் இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பலி - பிரதிப் படம்

Published On :29 ஜூலை 2026, 4:10 am IST

தருமபுரியில் கோயில் வளாகத்தில் தூக்கிட்ட நிலையில் இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் ஏ.ஜெட்டி அள்ளி அருகே உள்ள எர்ரப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் முருகன் மகன் சரண் (23). இவா் பைசுஅள்ளி பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ஆண் செவிலியராகப் பணியாற்றி வந்தாா். இரவுப் பணிக்கு செல்வதாக திங்கள்கிழமை மாலை சென்ற இவா், செவ்வாய்க்கிழமை காலை குட்டம்பட்டி ஏரிக்கரையில், புதிதாக கட்டப்பட்டு வரும் முனியப்பன் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகையில் தூக்கில் சடலமாக தொங்கியது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் காரிமங்கலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.