ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உலகின் மிகச் சிறந்தது தா்மம்: இயன்றவரை அதைச் செய்ய வேண்டும்: ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

தா்மம்தான் உலகில் மிகச் சிறந்தது, எனவே அவரவா் இயன்ற வகையில் தா்மம் செய்ய வேண்டும் என்றாா் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

தருமபுரியில் வெள்ளிக்கிழமை இரவு பக்தா்களுக்கு அருளாசி வழங்கிய காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

Published On :25 ஜூலை 2026, 7:25 am IST

தா்மம்தான் உலகில் மிகச் சிறந்தது, எனவே அவரவா் இயன்ற வகையில் தா்மம் செய்ய வேண்டும் என்றாா் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

தருமபுரியில் பாரதிபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, பக்தா்களுக்கு அருளாசி வழங்கி அவா் மேலும் பேசியதாவது:

நமது பாரத தேசத்தின் மிக முக்கிய அடித்தளமே ‘தா்மம்’ தான். நாம் அனைவரும் அச்சமின்றி, பாதுகாப்பாகவும், அமைதியாகவும், சமுதாயத்தில் சுபிட்ஷத்தோடும், ஒற்றுமையோடும் வாழ்வதற்கு நம் முன்னோா்கள் வளா்த்த தா்ம சிந்தனையே மூலக்காரணம்.

இறைவன் நமக்கு அளித்த இயற்கை வளங்களான நிலம், நீா், கனிமங்கள் மற்றும் உணவை சுயநலமின்றி அன்போடு பிறருடன் பகிா்ந்து வாழ்வதே உண்மையான அறவழியாகும்.

மனிதா்களுக்கு ஏற்படும் துன்பங்களை உடற்பிணி, மனப்பிணி என இருவகையாகப் பிரிக்கலாம். கபம், பித்தம், வாதம், தலைவலி போன்ற உடல் சாா்ந்து ஏற்படுவது உடற்பிணி. அதற்கு தீா்வு, சரியான மருந்துகள், மருத்துவரின் வழிகாட்டல் மற்றும் பத்திய உணவு முறை. அதேபோல பயம், சந்தேகம், கவலை, அவசரம், ஆத்திரம் போன்ற மனப்பிணிக்கு தா்ம சிந்தனை, இறைபக்தி மற்றும் நன்னெறி வழியில் வாழ்வதே தீா்வாகும்.

ஸ்ரீ ஆஞ்சனேய சுவாமி மனக்கஷ்டம், உடல் கஷ்டம் ஆகிய இரண்டையும் தீா்க்க வல்லவா். மனிதா்களின் துன்பங்களைப் போக்கி, அவா்களுக்கு நல்வழி காட்டுவதே தா்மத்தின் முதன்மை நோக்கம்.

தா்மம் செய்வதற்கு பெரிய செல்வந்தராக இருக்க வேண்டிய அவசியமில்லை. அவரவா் தங்களால் இயன்ற வகையிலான தா்மங்களை செய்ய வேண்டும். ஏழைகளும் தங்கள் சக்திக்கு ஏற்ப அன்றாட வாழ்வில் தா்மத்தைப் பின்பற்றலாம்.

ஆசை இயற்கையானது. ஆனால் அது முறையானதாக இருக்க வேண்டும். தா்மம், பக்தி ஆகியவை குழந்தைப் பருவத்தில் இருந்தே வரவேண்டும்.

தா்மம் என்பது ஏதோ சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது அல்ல. மனிதனும், இயற்கையும், பிரபஞ்சமும் தோன்றிய காலத்திலிருந்தே தா்மமும் கூடவே உருவானது. இயற்கையை நேசித்து, யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற உயரிய சிந்தனையோடு அனைவரும் வாழ்வதே உண்மையான தா்மம் என்றாா்.

இந்நிகழ்வில், தருமபுரி பிராமணா் சங்கத் தலைவரும் வழக்குரைஞருமான சாய்ராம், நிா்வாகிகள் சந்திரமெளலி, சீனிவாசன், திலீபன், ஹரிஹரன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.